முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நானியின் 'தசரா' பட தீக்காரி பாடல் - சர்ப்ரைஸ் கொடுத்த சந்தோஷ் நாராயணன்

நானியின் 'தசரா' பட தீக்காரி பாடல் - சர்ப்ரைஸ் கொடுத்த சந்தோஷ் நாராயணன்

நானி - சந்தோஷ் நாராயணன்

நானி - சந்தோஷ் நாராயணன்

நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தெலுங்கு நடிகர் நானி. நேச்சுரல் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளால்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவருகிறார்.

தற்போது தெலுங்கில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள தசரா படத்தில் நானி நடித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்திலிருந்து தீக்காரி என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

' isDesktop="true" id="893069" youtubeid="7G2a_ML3CuA" category="cinema">

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.

First published:

Tags: Keerthy suresh, Music director santhosh narayanan