முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா பட ட்ரெய்லர்!

Video: நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா பட ட்ரெய்லர்!

தசரா ட்ரெய்லர்

தசரா ட்ரெய்லர்

Dasara (Tamil) - Official Trailer | தசரா படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தெலுங்கு நடிகர் நானி. நேச்சுரல் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

தற்போது, தெலுங்கில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள தசரா படத்தில் நானி நடித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த தசரா படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் 30ம் தேதி இந்திய அளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் யூடியூபில் தற்போது வரை 5 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

' isDesktop="true" id="910285" youtubeid="QheyLKgRRIk" category="cinema">

நன்றி: Saregama Tamil

First published:

Tags: Keerthi suresh, Movie Trailers