சாமியார்களின் நதிமூலம், ரிஷமூலத்தை தேடுவதைவிட சுவாரஸியமானது ஒரு திரைப்படத்தின் நதிமூலத்தை தேடுவது. அதாவது ஒரு படத்தின் கரு எங்கிருந்து உருவானது என்பதை கண்டடைவது.
2018-ல் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவ் மெக்குவின் Widows என்ற படத்தை இயக்கினார். தன்னிடம் பணம் திருடியவன் இறந்து போக, அந்தப் பணத்தை நீதான் தந்தாக வேண்டும் என இறந்து போனவனின் மனைவியை கேங்ஸ்டர் ஒருவன் மிரட்ட, அவள் தன்னைப் போலவே சில விதவைகளை ஒன்றிணைத்து, அரசியல்வாதியிடம் ஆட்டையைப் போட முயற்சிக்கிறாள். இதுதான் விடோஸ் படத்தின் ஒன் லைன். இந்தப் படம் 2018 செப்டம்பரில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
2019-ல் விக்ரம் குமார் இயக்கத்தில் நானி நடிப்பில் கேங் லீடர் என்ற படம் வெளியானது. ஆறு பேர் ஒரு திருட்டை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். அதில் ஒருவன் மற்ற ஐவரையும் கொன்றுவிட்டு, மொத்த பணத்துடன் தப்பிக்கிறான். கொல்லப்பட்டவர்களின் அன்புக்குரிய ஐந்து பெண்கள், கொலையாளியை கண்டுபிடிக்க க்ரைம் கதை எழுத்தாளரான நானியின் உதவியை நாடுகின்றனர். கிட்டத்தட்ட விடோஸ் படத்தின் ஒன்லைனை ஒத்த இப்படம் விடோஸ் வெளியாகி சரியாக ஒரு வருடம் கழித்து 2019 செப்டம்பரில் வெளியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கேங் லீடர் சுமாராகவே போனது. எனினும் இந்தப் படத்தை
தமிழ், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப் போவதாக இயக்குனர் விக்ரம் குமார் அறிவித்துள்ளார். இவர் தமிழில் வெளியான
யாவரும் நலம் படத்தின் மூலம் இயக்குனரானவர். தொடர்ந்து தெலுங்கில் படம் இயக்கியவர், நீண்ட இடைவெளிக்குப் பின் சூர்யாவின் 24 படத்தை இயக்கினார். அது சுமாராகப் போக, மீண்டும் தெலுங்கில் படங்கள் இயக்கி வருகிறார்.
விடோஸ் திரைப்படத்தைவிட கச்சிதமான கதை
கேங் லீடர். தமிழில் ரீமேக் செய்தால் ஓடக்கூடிய அனைத்து சாத்தியங்களும் இந்தக் கதைக்கு இருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.