• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிம்பு - சுசீந்திரன் படத்தில் நடிக்கும் நடிகை நந்திதா

சிம்பு - சுசீந்திரன் படத்தில் நடிக்கும் நடிகை நந்திதா

சிம்பு | நந்திதா

சிம்பு | நந்திதா

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிகை நந்திதா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா 5-வதாக தயாரிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு தனது உடல் எடையைக் குறைத்து தயாராகியுள்ளார். திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டிருக்கும் படக்குழு 2021-ம் படத்தைத் திரைக்கு கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை நந்திதா ஸ்வேதா படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க: வனிதாவுக்கு பா.ஜ.க பதில்சொல்லவில்லையாம்: கஸ்தூரி பதிவிட்ட ட்வீட்


சுசீந்திரன் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: