ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுப்படுத்திய பாலகிருஷ்ணா - வலுக்கும் கண்டனங்கள்

பாலகிருஷ்ணா

எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

 • Share this:
  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானை இழிவுபடுத்திப் பேசியது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: