ஐயப்பனும் கோஷியும் படத்தில் ‘கலகாத்தா’ பாடலைப் பாடிய நஞ்சியம்மா சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.
பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்து சச்சிதானந்தனால் இயக்கப்பட்ட ஐய்யப்பனும் கோஷியும் மலையாளத்தில் ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தின் கலகாத்தா பாடல் யூடியுபில் வெளியானது. இப்பாடலை நஞ்சியம்மா என்ற பழங்குடி இனப் பெண் பாடினார். இப்பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றது. அதனால் நஞ்சியம்மாவும் மிகவும் பிரபலமானார்.
படம் வெளியாகி மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அதே போல்
அமேசான் பிரைமில் வெளி வந்த இப்படத்தை பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஸ்டண்ட் அமைப்பு, சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட விருதுகளை அப்படம் வென்றுள்ளது.
அப்படத்தின் இயக்குநர் கே ஆர் சச்சிதானந்தன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராஜசேகர், மாபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர், நடிகர் பிஜு மேனன், கலகாத்தா பாடல் பாடிய நஞ்சியம்மா உள்ளிட்டோர் விருதுகளை வென்றுள்ளனர்.
நஞ்சியம்மா அட்டப்பாடிப் பகுதியைச் சேர்ந்தவர். இவரது பிரதான தொழில் ஆடு மேய்த்தல். பாரம்பரியமாக குலப்பாடல்கள் பாடுவது என்பது பழங்குடி இனத்தில் உள்ள வழக்கம். அப்படி நஞ்சியம்மாவுக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும்.
இவர் நடித்த ‘அக்கெட் நாயகா’ என்ற ம்லையாள குறும்படம் கேரள மாநில விருதுகளை வென்றது. இவர் இதற்கு முன்பு ‘வெளுத்த ராத்திரிகள்’ என்ற மலையாளப் படத்தில் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, National Film Awards, Youtube