காதல் மெலடியாக கலக்கும் ’மயிலாஞ்சி’ - நம்ம வீட்டுப் பிள்ளை பாடல் ரிலீஸ்

காதல் மெலடியாக கலக்கும் ’மயிலாஞ்சி’ - நம்ம வீட்டுப் பிள்ளை பாடல் ரிலீஸ்
நம்ம வீட்டுப் பிள்ளை
  • News18
  • Last Updated: August 28, 2019, 8:23 PM IST
  • Share this:
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள மயிலாஞ்சி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


படத்தின் முதல் பாடலான ‘எங்க அண்ணன்’ பாடல் கடந்த 23-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.

தற்போது மயிலாஞ்சி என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பிரதீப் குமார் மற்றும் ஷ்ரேயா கோசல் ஆகியோர் பாடியுள்ளனர்.

முன்னதாக சிவகார்த்திகேயன் - இமான் கூட்டணியில் ஷ்ரேயா கோசல், சீமராஜா படத்தில் உன்ன விட்டா யாரும் எனக்கில்ல, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்து என்னடா என்னடா ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

Loading...

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...