நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் அடுத்த அப்டேட்!

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் அடுத்த அப்டேட்!
நம்ம வீட்டுப் பிள்ளை
  • News18
  • Last Updated: September 3, 2019, 8:18 PM IST
  • Share this:
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள காந்தக் கண்ணழகி பாடலின் லிரிக் வீடியோ குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். தங்கை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும், தாத்தா கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரக்கனி, சுரி, நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஏற்கெனவே படத்தின் இரண்டு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில், காந்தக் கண்ணழகி என்ற பாடல் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: காமெடி மட்டும் தான் பண்ண முடியும் என்றார்கள் ஆனால் இப்போது...! சிவகார்த்திகேயன் அதிரடி

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' மற்றும் 'நம்ம வீட்டுப்பிள்ளை' ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் தினமும் மாறி மாறி வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Loading...

வீடியோ பார்க்க: காதலிக்கு செலவு செய்த ₹3 ஆயிரத்தை கேட்டு போலீசில் புகாரளித்த இளைஞர்

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...