கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் நமீதா?

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ஜெய்சிம்ஹா படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

news18
Updated: July 28, 2019, 7:50 PM IST
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் வில்லியாகும் நமீதா?
கே.எஸ்.ரவிக்குமார் | நடிகை நமீதா
news18
Updated: July 28, 2019, 7:50 PM IST
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நமீதா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக சுதீப் நடித்த ’முடிஞ்சா இவன பிடி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை அடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ஜெய்சிம்ஹா படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் வசூலைக் குவித்து வெற்றி பெற்றது.

இதையடுத்து மீண்டும் பாலகிருஷ்ணாவுடன் கரம் கோர்த்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ரூலர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை வேதிகா, சோனல் சௌகான் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை நமீதாவும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: டிக்டாக் குற்றங்களின் கதை!

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...