வாத்தி கம்மிங் பாடலுக்கு நமீதாவுடன் நடனமாடிய வானதி சீனிவாசன் - வீடியோ

தேர்தல் பிரசாரத்தில் நமீதா

தேர்தல் பிரசாரத்தின் போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நமீதாவுடன் நடனமாடியுள்ளார் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்.

  • Share this:
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகின்றன. தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேட்பாளர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வரும் வேளையில் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நமீதாவுடன் இணைந்து விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட நமீதா தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் மாஸ்டர். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் தற்போது வரை 125 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறை சோதனை விஜய் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அதற்கு பாஜக அரசுதான் காரணம் என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது விஜய்யின் பாடலை பாஜக வேட்பாளர் தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி கவனம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: