• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ' விஷால் நாட் ஏ காமன் மேன்' - பெயர் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விஷால்

' விஷால் நாட் ஏ காமன் மேன்' - பெயர் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விஷால்

விஷால்

விஷால்

விஷாலுக்கு தற்போது உதவி இயக்குனர் வழியாக மேலும் ஒரு சர்ச்சை வந்து சேர்ந்துள்ளது.

  • Share this:
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர் விஷால் தற்பொழுது பெயர் திருட்டு சர்ச்சை ஒன்றிலும் சிக்கியுள்ளார். இதுகுறித்து செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருவிளையாடல் திரைப்படத்தில் பிரிக்க முடியாதது எது என்று கேட்பதுபோல் தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது எது என்ற கேள்விக்கு விஷாலும் சர்ச்சையும் என்று அனைவருமே எளிதில் கூறி விடும் அளவிற்கு விஷால் எங்கு இருக்கிறாரோ அங்கே சர்ச்சைகளும் நிரம்பியிருக்கிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சர்சைகளுக்கு உள்ளேயே உழன்று கொண்டிருக்கும் விஷாலுக்கு தற்போது உதவி இயக்குனர் வழியாக மேலும் ஒரு சர்ச்சை வந்து சேர்ந்துள்ளது.

சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷாலின் 31-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் வெளியான முன்னோட்டம் ஒன்றில் விஷால் 31 என்ற பெயரிடப்படாத டைட்டிலோடு Not a காமன் மேன் என்று அடைமொழியும் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்டு பதறிப்போய் உள்ள உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் என்பவர் தனது டைட்டிலை விஷால் திருடிவிட்டதாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.

Also Read: புதிய தளர்வுகள்: சென்னையில் என்ன இயங்கும்? என்ன இயங்காது?

விஷாலின் பாண்டியநாடு உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜயானந்த் விஷாலுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான விஷாலின் சக்ரா படத்தில் விஷால் கேட்டுக்கொண்டதற்கிணங்க போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் வேலை செய்ததாக கூறும் விஜய் ஆனந்த் இந்த சமயத்தில் தனது காமன் மேன் என்ற கதையையும் காமன் மேன் என்ற டைட்டிலையும் விஷாலிடம் கூறியுள்ளார். இதனையடுத்து விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டாக் லைனாக காமன் மேன் என்ற வரி இடம் பெறவே பதறிப்போன விஜய் ஆனந்த், நேரடியாகவே விஷாலிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து தங்களது டைட்டில் பயன்படுத்தப்படாது என உறுதியளித்த விஷால் நாட் ஏ காமன் மேன் என்ற by liner ஐ பயன்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைப்பார்த்து பதறிப்போய் உள்ள விஜய் ஆனந்த் தனது 15 ஆண்டுகால உழைப்பும் கனவும் ஒரே ஒரு எழுத்தில் களவாடப்படுவதாக கதறுகிறார். மேலும் தனது டைட்டில் மட்டும் பட்டி டிங்கரிங் பார்த்து களவாடப்பட்டு உள்ளதா அல்லது தனது படத்தின் மொத்த கதையும் களவாடப்பட்டு விட்டதா என்ற அச்சத்திலும் இருக்கிறார். ஷங்கர் தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் என அறிமுகம் ஆனது போல காமன் மேன் என்ற பெயரோடு அறிமுகமாக கனவுகளோடு காத்திருந்த தனக்கு இது பெரும் ஏமாற்றம் என கண்ணீர் வடிக்கும் விஜய் ஆனந்த் காமன்மேன் என்ற தலைப்பில் அவர் இதுவரை செய்து வைத்துள்ள டைட்டில் டிசைன்களையும் வேதனையுடன் காட்டுகிறார்.

Also Read: Priya Prince: சின்னத்திரை பிரபலம் பிரியா பிரின்ஸ்-க்கு 16 வயது மகளா? பிறந்தநாள் கியூட் புகைப்படங்கள்!

இதுகுறித்து விஷால் தரப்பில் விசாரித்தபோது Not a common man என்பது ஒரு சாதாரண By liner என்று விஜய் ஆனந்திற்கு பலமுறை தாங்கள் விளக்கம் கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். மேலும் காமன் மேன் என்ற டைட்டிலும்  விஜய் ஆனந்த் இல்லை என உறுதியுடன் தெரிவிக்கின்றனர். மேலும் சட்டப்படி தாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் உறுதியுடன் கூறும் விஷால் தரப்பினர் இது குறித்து நேரடியாக விஜயானந்த் இடமே தொலைபேசியில் விளக்கம் அளித்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும் விளக்கங்கள் வெறும் கண்துடைப்பு என கூறும் விஜய் ஆனந்த் தனது கனவுகளை விஷால் களவாடி விட்டதாக கோடம்பாக்கம் வீதிகளில் வேதனையுடன் திரிகிறார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: