“எதிர்காலத்தில் கமல் கட்சி நடத்துவது ஐயம் தான்“ - நமது அம்மா விமர்சனம்

“எதிர்காலத்தில் கமல் கட்சி நடத்துவது ஐயம் தான்“ - நமது அம்மா விமர்சனம்
கமல்ஹாசன் (கோப்புப் படம்)
  • Share this:
மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்திருப்பதை விமர்சித்திருக்கும் நமது அம்மா நாளிதழ், கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்று விமர்சித்துள்ளது.

மேலும் அந்நாளிதழில் கூறப்பட்டிருப்பதாவது, கமல் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகிறது.

கிராமசபை நடத்துகிறேன் என்று ஏக பில்டப்போடு அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் எதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனாக, முதல் காட்சியில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதலமைச்சர் இருக்கையை கணக்கு போட்டார்.


ஆனால் ஒரே இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலோடு ஆளைவிட்டால் போதும் என்று உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து கிராமசபை கமல்ஹாசன் பின்னங்கால் பிடரிபட புறமுதுகோடுகிறார் என்றால் அடுத்தவர் மீது குற்றங்களை அடுக்கினால் அதிகார இருக்கை தனக்காகி விடும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடமாகிறார் உலகநாயகன் கமல்ஹாசன் என்பது தான் மக்கள் நீதி மய்யத்தால் உணர்த்தப்படும் செய்தி” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்