ராஜபக்ச வீட்டிலும் இடம்பிடித்த நடிகர் விஜய்!

அதில், #7DayChallenge என்ற ஹேஷ்டேக்கில் தான் விஜய்யின் பிகில் படம் பார்ப்பது போல் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ராஜபக்ச வீட்டிலும் இடம்பிடித்த நடிகர் விஜய்!
விஜய் | ராஜபக்ச
  • Share this:
ஏராளமான ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய்க்கு ராஜபக்ச வீட்டிலும் ஒரு தீவிர ரசிகர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் இலங்கையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச ஊரடங்கு நாட்களில் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு சவால்களை விடுத்து போட்டி நடத்தி மக்களை வீட்டிலேயே இருக்க ஊக்கப்படுத்தி வருகிறார். அதில், #7DayChallenge என்ற ஹேஷ்டேக்கில் தான் விஜய்யின் பிகில் படம் பார்ப்பது போல் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


மேலும் அந்த பதிவில் நமல் ராஜபக்ச கூறியிருப்பதாவது, “ஏழு நாள் சவாலின் இறுதி நாள் இன்று.. பெரும்பாலும் வீட்டில் ஓய்வெடுப்பதுதான் வேலை... நான் மிகவும் விரும்பும் நடிகரான விஜய் நடித்த நான் விரும்பும் படமான பிகிலை எண்ணிலடங்கா முறையாக நான் பார்க்கும்போது லிமினி என்னைப் பார்த்துவிட்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரின் இப்பதிவின் மூலம் நமல் ராஜபக்ச விஜய்யின் ரசிகர் என்பது தெரிய வருகிறது.
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading