Home /News /entertainment /

வடிவேலுவை நாயகனாக்க விரும்பும் நலன் குமாரசாமி, கௌதம் வாசுதேவ் மேனன்!

வடிவேலுவை நாயகனாக்க விரும்பும் நலன் குமாரசாமி, கௌதம் வாசுதேவ் மேனன்!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

நம் காலத்தின் நகைச்சுவை நாயகன் வடிவேலு. அவரை வைத்து படம் பண்ண முன்னணி இயக்குனர்கள் ஆர்வமுடன் உள்ளனர். முக்கியமாக நலன் குமாரசாமி, கௌதம் வாசுதேவ மேனன் இருவரும் விருப்பமுடன் உள்ளனர்.

சூதுகவ்வும் படம் முடிந்ததும் கொரிய திரைப்படமான டெஸ்பரேடோவை தமிழில் சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தார் நலன் குமாரசாமி. எக்ஸிமோ காதல் என படத்துக்கு பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்தின் கதையில் தனக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்று படத்திலிருந்து வெளியேறினார் சூரியா. பிறகு அந்தப் படத்தைதான் காதலும் கடந்து போகும் என்ற பெயரில் விஜய் சேதுபதியை வைத்து நலன் குமாரசாமி இயக்கினார்.

எக்ஸிமோ காதல் கைகூடாது போனதும் அவர் வடிவேலுவை நாயகனாக்கி ஒரு படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அதற்காக கதை விவாதம் நடந்தது ஆனால் ஸ்கிரிப்ட் திருப்தி இல்லாமல் போக அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது ஆர்யா நடிப்பில் சூப்பர் ஹீரோ திரைப்படம் ஒன்றை  ஸ்டுடியோ கிரீனுக்காக இயக்கயிருக்கிறார் நலன் குமாரசாமி. இதையடுத்து வடிவேலு நடிக்கும் படத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். வடிவேலுவை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற திட்டத்தை இன்னும் கைவிடவில்லை என அவர் சமீபத்திய பேட்டியிலும் கூறியிருந்தார்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இவரைப்போலவே கௌதம் வாசுதேவ் மேனனும் வடிவேலு நடிப்பில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். கௌதம் என்றால் காதல் தான் நினைவுக்கு வரும். இந்தப் படமும் காமெடி கலந்த காதல் திரைப்படமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த கதைக்கு வடிவேலு பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

Gangai Amaran: தமிழ் சினிமாவில் மனம் வீசும் கங்கை அமரன் பாடல்கள்!

வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அவரை நாயகனாக்கி அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது ஆர்வத்தை தூண்டும் கேள்வி. நலனும், கௌதமும் வடிவேலுவை வைத்து படம் இயக்கினால் அது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Vadivelu

அடுத்த செய்தி