• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா இணையும் வெப் தொடர்!

நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா இணையும் வெப் தொடர்!

தியாகராஜன் குமாராஜா, நலன் குமாரசாமி,

தியாகராஜன் குமாராஜா, நலன் குமாரசாமி,

சூதுகவ்வும் என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை இயக்கியவர் சொந்த ஸ்கிரிப்டில் இயக்கிய ஒரேயொரு படமாக அதுவே உள்ளது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாராஜா வெப் தொடர் ஒன்றை இணைந்து உருவாக்குகின்றனர்.

சூது கவ்வும் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தப் படத்தை இயக்க 5 வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார் நலன். இரண்டாவது படமாக காதலும் கடந்து போகும் வெளியானது. அதுவும் தென்கொரிய திரைப்படமான மை டியர் டெஸ்பரடோவின் அதிகாரப்பூர்வ தழுவல். அந்தப் படம் வெளியாகியும் பல வருடங்களாகிறது. நடுவில் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸில் ஒரு எபிசோடை எழுதினார். சி.வி.குமார் இயக்கிய மாயவன் படத்தின் திரைக்கதையை எழுதித்தந்தார். சமீபத்தில் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியில் இடம்பெற்ற ஆடல் பாடல் குறும்படத்தை எழுதி இயக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து ஆர்யா நடிப்பில் சூப்பர் ஹீரோ படத்தை இயக்குவதாக இருந்தது. தயாரிப்பு தரப்பு படத்தை தள்ளி வைத்ததால் சுதா கொங்கராவின் புதிய படத்துக்கான திரைக்கதையை எழுதி வருகிறார். அத்துடன் தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கும் வெப் தொடரில் சில எபிசோடுகளை எழுதியுள்ளார். ஆர்யா படம் தள்ளிப் போவதால் நலன் கதை, திரைக்கதை எழுதித் தருவதில் பிஸியாகியுள்ளார்.

Also read... ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகும் செல்வராகவன் படம்...!

சூதுகவ்வும் என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை இயக்கியவர் சொந்த ஸ்கிரிப்டில் இயக்கிய ஒரேயொரு படமாக அதுவே உள்ளது. 

ஆர்யாவுக்காக எழுதியிருக்கும் சூப்பர்ஹீரோ திரைக்கதை நலனின் இரண்டாவது சொந்த திரைக்கதை. ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஆர்யாவுக்கு அவர் சம்பள பாக்கி வைத்துள்ளதால், ஆர்யா கால்ஷீட் தராததே படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: