இயக்குநர் சங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் தன்னுடன் படித்த தோழி ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதி இருவரும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதன் மூலம் பிரபலமான ஜோடிகளாக வலம் வருகின்றனர்.
குறிப்பாக ஸ்ருதி தனது கணவர் நகுலுடன் வாட்டர் பெர்த் என்ற முறையில் குழந்தையை பெற்றெடுத்தது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவியது.
வலியில்லாமல் சுகப்பிரசவம் மேற்கொள்ளும் இந்தமுறை மெல்ல மெல்ல நம்நாட்டிலும் பரவி வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
குழந்தை பேற்றை சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இதற்கு ஸ்ருதியும் தனது கருத்துக்கள் மூலமாக பதிலடி கொடுத்துவந்தார். இந்நிலையில் அண்மைக்காலமாக ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்மநபர்கள் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை அளித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார் ஸ்ருதி.
பலமுறை கண்டித்தும் மர்மநபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து அனுப்பி வருவதாக கூறியுள்ளார். பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கத்தைப் பற்றி தவறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நவீன ஆடைகளை அணியும் பெண்களுக்கு இதுபோன்று ஆபாச வீடியோக்களை அனுப்பலாம் என இதுபோன்ற ஆண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னைப் போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்ருதி கடுமையான விதிகள் கொண்டுவரப்படும் வரை இதுபோன்ற விஷயங்களில் மாற்றம் ஏற்படாது என கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Nakul