• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: விவேக் நினைவாக மரக்கன்று நட்டு மங்களம் எனப் பெயரிட்ட பாய்ஸ் பட நடிகர்!

Actor Vivek: விவேக் நினைவாக மரக்கன்று நட்டு மங்களம் எனப் பெயரிட்ட பாய்ஸ் பட நடிகர்!

விவேக் - நகுல்

விவேக் - நகுல்

மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு அதற்கு மங்களம் எனப் பெயரிட்டுள்ளார் பாய்ஸ் பட நடிகர் நகுல்.

  • Share this:
    மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு அதற்கு மங்களம் எனப் பெயரிட்டுள்ளார் பாய்ஸ் பட நடிகர் நகுல்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது.




    விவேக்கின் மறைவு பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பதில் ஈடுபாடு காட்டி வந்த விவேக்கின் நினைவாக ரசிகர்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்திக் மரக்கன்றுகளுடன் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் நடிகர் நகுல் மாமரம் ஒன்றை நட்டு, அதற்கு மங்களம் எனப் பெயர் சூட்டியுள்ளார். மேலும் மரம் நடும் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், ஜெனிலியா, நகுல், பரத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் மங்களம் எனும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விவேக்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: