ஹெல்மெட் போடாவிட்டால் ஷாரூக்கான் நிலைதான் வரும் என்று, ஜவான் படத்தின் போஸ்டரை காவல்துறையினர் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த பதிவு மக்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த போஸ்டரில் தலையில் கட்டுப் போட்ட நபராக ஷாரூக்கான் இருப்பார். இதை பார்ப்பதற்கு அவர் தலையில் நன்றாக அடி வாங்கியதைப் போன்று இருக்கும்.
இதையும் படிங்க - சரத்குமாரிடம் தளபதி 66 அப்டேட்டை இனிமேல் யாரும் கேட்க மாட்டார்கள்!! அப்படியொரு பதில்…
ஜவான் படத்தின் போஸ்டர் வைரலானதை தொடர்ந்து அதனை நாக்பூர் நகர காவல்துறையினர் ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் ஹெல்மெட் அணியாமல் போகும்போது இப்படித்தான் நடக்கும் என்று பதிவிட்டு, ஜவான் ஃபர்ஸ்ட் லுக்கை அப்லோட் செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க - நடிகர் ஷாரூக்கானுக்கு கொரோனா பாசிட்டிவ்… வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுவதாக தகவல்
மேலும், இப்போதாவது ஹெல்மெட் அணியுங்கள் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். நாக்பூர் சிட்டி போலீசின் இந்த கிரியேட்டிவ் பதிவு மக்கள் மத்தியில் நன்றாக ரீச் ஆகியுள்ளது.
ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிக்கிறார். மேலும் யோகி பாபு படத்தில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவான் பட டைட்டில் அறிவிப்பு வீடியோவைப் பார்க்க...
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வைரலாகி உள்ளது. குறிப்பாக பிஜிஎம் தாறுமாறாக உள்ளதென ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.