எப்பா..என்ன ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் - ஆச்சரியத்தை ஏற்படுத்திய நடிகை அமலாவின் மகன்

அகில்

நடிகை அமலா - நாகார்ஜுன் தம்பதியின் மகன் அகில் நடிக்கும் ஏஜென்ட் படத்தின் படப்பிடிப்பி நேற்று தொடங்கியது. அமுல்பேபி போன்றிருந்த அகில் இந்தப் படத்துக்காக தனது உடம்பை முற்றிலும் மாற்றியிருக்கும் புகைப்படம் ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.

  • Share this:
    நடிகை அமலா, நாகார்ஜுன் தம்பதியின் மகனான அகில் 2015 இல் அகில் என்ற படத்தின் மூலம் நாயகனானார். அவரது அமுல்பேபி போன்ற தோற்றம் காரணமாக ரொமான்டிக் படங்களே அமைந்தன. ஆனால், பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஏஜென்ட் என்ற ஆக்ஷன் படத்தில் முதல்முறையாக நடிக்கிறார்.

    இதுவொரு ஸ்பை த்ரில்லர் திரைப்படம். அகில் ஒரு உளவாளி என்று காட்டும்போது அதற்கேற்ப உடம்பும் இருக்க வேண்டும் அல்லவா?

    ஜிம்மில் பழியாகக் கிடந்து உடம்பை இரும்பாக்கி முற்றிலும் வேறு நபராக மாறியுள்ளார் அகில். நேற்று ஏஜென்டின் பர்ஸ்ட் லுக்குடன் தனது உடற்கட்டு தெரியும் புகைப்படத்தையும் வெளியிட்டார் அகில். அதைப் பார்த்த தெலுங்கு திரையுலகம் ஆச்சரியப்பட்டுப் போனது. அமுல் பேபிக்குள் இப்படியொரு அர்னால்ட் ஸ்வாஸ்நேகரா என்ற வியப்பு. ஏஜென்ட் திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க, தமன் இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் படம் தயாராகிறது. அகிலின் உடற்கட்டு படத்துக்கு நல்ல பப்ளிசிட்டியாக அமைந்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Akhil Akkineni (@akkineniakhil)





    தமிழிலும் பரத், விஷ்ணு விஷால், ஆர்யா, விஷால் என இளம் நடிகர்கள் உடற்கட்டு விஷயத்தில் கவனம் எடுத்து வருகின்றனர்
    Published by:Tamilmalar Natarajan
    First published: