இந்த வயதில் முத்த காட்சி தேவையா? சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா!

வயதான நடிகர்கள் மகள் வயது நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதை சின்மயி ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அதை நினைவுபடுத்தி உங்கள் கணவர் வயதான நடிகரையும் மகள் வயது நடிகையையும் முத்த காட்சியில் நடிக்க வைத்துள்ளாரே? இதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

news18
Updated: June 17, 2019, 12:43 PM IST
இந்த வயதில் முத்த காட்சி தேவையா? சர்ச்சையில் சிக்கிய நாகார்ஜுனா!
நாகார்ஜுனா
news18
Updated: June 17, 2019, 12:43 PM IST
மகள் வயதுடைய நடிகையுடன் முத்தக்காட்சி நடிப்பது தேவையா என்று ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் நாகார்ஜுனா.

தெலுங்கில் முன்னனி நடிகரான நாகர்ஜூனா தமிழில் ரட்சகன் என்னும் படத்தில் நடித்துள்ளார். 59 வயதான இவர் தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக ரகுல்பிரீத் சிங் மற்றும் அக்‌ஷரா கவுடா நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டீசரில் பெண் ஒருவருக்கு நாகார்ஜுனா உதட்டுடன் முத்தம் கொடுப்பதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. அந்த காட்சியில் வரும் நடிகையின் முகம் தெரியாததால் அது அக்‌ஷரா கவுடாவா அல்லது  ரகுல்பிரீத் சிங்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பலர் மகள் வயது உடைய பெண்ணுடன் முத்த காட்சியில் நடிக்கலாமா? இந்த வயதில் முத்த காட்சி தேவையா என்று கோபத்தில் நெட்டிசன்கள் கண்டித்து வருகிறார்கள்.

முத்த காட்சி வீடியோவும் நாகார்ஜுனாவை கண்டிக்கும் விவாதமும் வலைத்தளத்தில் வைராகி உள்ள நிலையில் டைரக்டர் ராகுல் ரவீந்திரன் மனைவியும் பாடகியுமான சின்மயியையும் சிலர் கண்டித்துள்ளனர்.

வயதான நடிகர்கள் மகள் வயது நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதை சின்மயி ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அதை நினைவுபடுத்தி உங்கள் கணவர் வயதான நடிகரையும் மகள் வயது நடிகையையும் முத்த காட்சியில் நடிக்க வைத்துள்ளாரே? இதை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also see...

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...