Home /News /entertainment /

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை தெலுங்கில் வெளியிடும் நாகார்ஜுனா!!

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை தெலுங்கில் வெளியிடும் நாகார்ஜுனா!!

நாகார்ஜுனா - கார்த்தி

நாகார்ஜுனா - கார்த்தி

Sardar Nagarjuna : கார்த்தியும், நாகார்ஜுனாவும் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்கி வரும் வம்சியின் இயக்கத்தில் தோழா என்ற படத்தில் நடித்துள்ளனர்.

    கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தை, முன்னணி நடிகர் நாகார்ஜுனா தெலுங்கில் வெளியிடுகிறார்.  தெலுங்கில் நாகார்ஜுனாவின் நிறுவனம் பிரமாண்டமானது என்பதால் சர்தார் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் சர்தார் படத்தின் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகம் உள்ளது.

    இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் சர்தார் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் அக்டோபர் மாதம் 24-ம்தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் சர்தார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!

    ஸ்பை த்ரில்லர் ஜேனரில் சர்தார் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மித்ரனின் இரும்புத் திரைப்படத்தில் பல டீடெய்ல்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்ற படம் ஒன்றை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    2018-ல் வெளியான இரும்புத் திரை படத்தில் ஹீரோவாக விஷாலும், வில்லனாக வொய்ட் டெவில் என்ற கேரக்டரில் அர்ஜுனும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

    ’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!

    ஆனால் 2019-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் சர்தார் படம் தன்னை மீண்டும் மார்க்கெட்டில் நிலை நிறுத்தும் என்ற நம்பிக்கையில் பி.எஸ். மித்ரன் உள்ளார்.



    இந்த நிலையில், சர்தார் படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தெலுங்கு மொழி பதிப்பில் நடிகர் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

    ஏற்கனவே கார்த்தியும், நாகார்ஜுனாவும் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்கி வரும் வம்சியின் இயக்கத்தில் தோழா என்ற படத்தில் நடித்துள்ளனர்.

    தனது படத்தை வெளியிடுவதற்காக கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நாகார்ஜுனா,  கார்த்தியுடன் இருந்த நாட்கள் இனிமையானவை. அவர் இன்னும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi

    அடுத்த செய்தி