தமிழ்நாட்டின்
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இதற்கிடையில், நாகசைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார். திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் 'எஸ்' என்று பெயரை மாற்றினார்.
சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பிரிகிறார்கள் என்று ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், இருவரும் இதுதொடர்பாக மறுப்பு தெரிவிக்காமலே இருந்துவந்தனர்.
இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாகசைதன்யா இன்டாகிராம் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். பத்துவருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.