ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காதலியை கரம் பிடிக்கும் சாய் பல்லவி பட ஹீரோ!

காதலியை கரம் பிடிக்கும் சாய் பல்லவி பட ஹீரோ!

நாக சவுரியா - சாய் பல்லவி

நாக சவுரியா - சாய் பல்லவி

திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமண விழாக்களை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தெலுங்கு நடிகர் நாக சவுரியா தனது காதலி அனுஷா ஷெட்டியை வரும் 20-ம் தேதி கரம் பிடிக்கிறார். 

  தெலுங்கின் முக்கிய நடிகராக திகழும் நாக சவுரியா, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த தியா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதற்கிடையே சமீபத்தில் வெளியான 'கிருஷ்ணா விருந்தா விஹாரி' திரைப்படத்தின் வெற்றியினால் நடிகர் நாக சவுரியா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

  அவர் தனது காதலியான அனுஷா ஷெட்டியை நவம்பர் 20-ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார். பெங்களூரில் உள்ள JW மேரியட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. முகூர்த்தம் காலை 11:25 மணி நடைபெறும் நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் மெஹந்தி விழா நடைபெறுகிறது.

  யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா

  மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் திருமணத்திற்கு முந்தைய மற்றும் திருமண விழாக்களை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேலையைப் பொறுத்தவரை, அடுத்தடுத்து 3 படங்களை கைவசம் வைத்துள்ளார் நாக சவுரியா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published: