Home /News /entertainment /

Naga Chaitanya: இரண்டாவது திருமணத்துக்கு தயாரான நாக சைத்தன்யா? மணப்பெண் இவராமே...

Naga Chaitanya: இரண்டாவது திருமணத்துக்கு தயாரான நாக சைத்தன்யா? மணப்பெண் இவராமே...

நாக சைத்தன்யா

நாக சைத்தன்யா

சமந்தாவுக்கு பிறகு மீண்டும் சினிமாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சைத்தன்யா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    சமந்தாவை பிரிந்த நடிகர் நாக சைத்தன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. இதற்கிடையே கடந்த அக்டோபர் 2-ம் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    பிரிவுக்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஊ அண்டவா என்ற பாடலில் தனது அசத்தலான அசைவுகளால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் சமந்தா. தற்போது நாக சைதன்யா 2வது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமந்தா ரூத் பிரபுவும், நாகசைத்தன்யாவும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதால், அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

    KGF 2 Collection: 6 நாட்களின் 600 கோடிக்கும் மேல் வசூலித்த கே.ஜி.எஃப் 2!

    விவாகரத்து அறிவிப்பு வெளியான சில மாதங்களுக்குப் பிறகு, நாக சைதன்யா தனது 2-வது திருமணத்திற்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு, கடும் துயரத்தை சந்தித்த சைத்தன்யா, தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சமந்தாவுக்கு பிறகு மீண்டும் சினிமாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சைத்தன்யா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    நாக சைத்தன்யா அல்லது அவரது குடும்பத்தினர் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வரை காத்திருப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Samantha

    அடுத்த செய்தி