நடிகர் ரஜினிகாந்தை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நடிகர் சங்க தேர்தல் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதை அடுத்து நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணை தலைவராக நடிகர் பூச்சி முருகன் தேர்வாகினர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பல்வேறு முக்கிய நடிகர்களை புதிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்ற நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினியை சந்தித்ததாகவும், சந்திப்பின் போது நடிகர் சங்கத்துக்கு பல முக்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியதாக கூறினார்.

ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள்
லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையை நிராகரித்த மாஸ் ஹீரோ?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி, தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், நாளை ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.