வாக்குரிமைக்காக போராடும் நீக்கப்பட்ட உறுப்பினர்கள்...! தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார் விஷால்

news18
Updated: June 16, 2019, 10:47 AM IST
வாக்குரிமைக்காக போராடும் நீக்கப்பட்ட உறுப்பினர்கள்...! தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார் விஷால்
விஷால் மற்றும் பாக்கியராஜ்
news18
Updated: June 16, 2019, 10:47 AM IST
நடிகர் சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தால் தேர்தல் நடக்குமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், தங்கள் வாக்குரிமைக்காக அவர்கள் போராடிவருகின்றனர். இதனிடையே, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என விஷால் தெரிவித்துள்ளார்.

3,200-க்கும் குறைவான வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள நடிகர் சங்க தேர்தல், நடிகர்களின் காரசார பேட்டிகளால் பெரும் கவனம் பெற்றுள்ளது. வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஷால் அணி பதவியில் இருந்தபோது 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டது ஏன்? என கேட்டு தமிழக அரசின் பதிவாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான பத்மநாபனை சந்திக்க வந்த நீக்கப்பட்ட உறுப்பினர்களை தேர்தல் அலுவலர் சந்திக்க மறுத்ததையடுத்து அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு நியாயத்திற்காக நடையாய் நடப்பதாகவும், தேர்தல் அலுவலராய் பத்மநாபன் இருக்கும் வரை தேர்தல் நியாயமாய் நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார் நீக்கப்பட்ட நாமக்கல் நடிகர் சங்க தலைவரான ராஜா.

சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகர்கள் எல்லாம் நடிக்கும் போது, எளிய நாடகக் கலைஞர்கள் நடிக்கப்போகும் போது விஷால் தரப்பு தடுப்பதாகவும் புகார் கூறுகின்றனர் நாடக கலைஞர்கள்.

தங்களை பார்க்க மறுக்கும் பத்மநாபன் விஷாலுக்கு மட்டும்தான் நீதியரசரா என ஆவேசமாக கூறியுள்ளார் சுமதி என்னும் நாடக கலைஞர்.

நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்காமல் தேர்தல் நடத்த சட்ட பிரச்னை இருப்பதால், தேர்தல் நடக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத்தேர்தல் நடைபெறும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பாண்டவர் அணி சார்பாக நடிகர் விஷால், பூச்சி முருகன் மனு அளித்துள்ளனர்.

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...