Home /News /entertainment /

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி... பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி... பாண்டவர் அணி தொடர்ந்து முன்னிலை

வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது.

வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது.

வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது.

    நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

    2015ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கிய போது வார்த்தை மோதல்கள் உச்சத்தை எட்டி இருந்தது. மாறி மாறி ஒருமையில் அழைப்பதும் அவ்வபோது நடந்தது. ராதாரவி தரப்பில் களமிறக்கப்பட்ட சிம்புவும் விஷாலை நரி என கூறி தேர்தல் சூட்டை அதிகப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு பொது தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

    வெறும் 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே கொண்ட நடிகர் சங்க தேர்தல் தமிழக சினிமா களத்தில் முக்கிய கவனம் பெற 2015 தேர்தல் முக்கிய காரணமாக மாறியது. ஒரு கட்டத்தில் ராதிகா, விஷாலை சாதி ரீதியக அழைத்து சாதிய, மொழி சண்டைக்கு வித்திட சாதிய மற்றும் இனவாதம் நடிகர்களுக்கும் பிரதானப்பட்டது. எனினும் இந்த தேர்தலில் விஷால் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்று நாசர் தலைமையில் விஷால் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

    இந்த செயற்குழு பதவிக்காலம் முடிந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னர் நீதிபதியை நியமித்து தேர்தலை அறிவித்தது செல்லாது என்ற புகாரோடு புதிய தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியது. ஆனால் இந்த முறை தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே அதீத அமைதி கடைபிடிக்கப்பட்டது.

    இதையும் படிங்க - வாடிவாசல் டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்ட சூர்யா


    விஷாலுக்கு எதிராக புதிய அணியை கட்டமைத்த ஐசரி கணேஷ் உள்ளிட்டோர், நாங்கள் இன்னும் விரைவாக கட்டடம் கட்டுவோம் என்பதை தாண்டி வார்த்தையில் கடுமை காட்டுவதை தவிர்த்தே வந்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்ற பாக்யராஜ் நாங்கள் கட்டடம் கட்டி முடித்தால் முதல் மரியாதை நாசருக்கும் விஷாலுக்கும் என நட்பு பாராட்டினார்.


    ஆனால் இரு தரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க தொடங்கினர். பாக்யராஜ் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் மீது தனி மனித தாக்குதலை தொடங்கினார், விஷால் தரப்பில் உள்ள கருணாஸ்.

    இதையும் படிங்க - Valimai OTT : தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    இதனால் பொறுமை இழந்த பாக்யராஜ் அணியும் விஷால் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் கண்டுபிடித்து புகார் சொல்ல தொடங்கியது.

    வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் ஒரே குடும்பம் என பேசினாலும், பேசும் வார்த்தைகளின் கடுமை நாளுக்கு நாள் கூடியது. தேர்தல் நடைபெறுமா நடைபெறாத என்ற குழப்பத்திற்கு இடையே 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களின் வாக்குரிமை புறக்கணிக்கப்பட்டது, பதவிக்காலம் முடிந்து தேர்தலை அறிவித்தது என பல்வேறு பிரச்சினைகள் அடுத்தடுத்து நீதிமன்றக் கதவுகளைத் தட்ட நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவின் முடிவுகள் பேங்க் லாக்கரில் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டது. பூட்டி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் விஷால் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு விஷால் அணி தரப்பில் போட்டியிட்டவர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலுக்கு 1720 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷுக்கு 1032 வாக்குகளும்கிடைத்தன. பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக்கு 1530 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரசாந்திற்கு 794 வாக்குகளும் கிடைத்தன.

    துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களத்தில் நின்ற குட்டி பத்மினிக்கு 1015 வாக்குகள் கிடைத்தன. இன்னொரு துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட கருணாஸ் 1605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உதயா 973 வாக்குகள் பெற்றார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Nadigar Sangam

    அடுத்த செய்தி