Home /News /entertainment /

நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய சங்கரதாஸ் அணியினர்!

நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய சங்கரதாஸ் அணியினர்!

 நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணியில் இருந்து விஷால் மற்றும் கார்த்தி ஆகிய நடிகர்கள் வராமல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணியில் இருந்து விஷால் மற்றும் கார்த்தி ஆகிய நடிகர்கள் வராமல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணியில் இருந்து விஷால் மற்றும் கார்த்தி ஆகிய நடிகர்கள் வராமல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

    தென்னிந்திய நடிகர் சங்க வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் பாதியிலேயே சங்கரதாஸ் அணியினர் வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறினர்.

    2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நிறுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி வாக்கு எண்ணிக்கை இன்று சென்னையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் துவங்கிய நிலையில் தேர்தலில் போட்டியிட்ட உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையிட பள்ளி வளாகத்திற்கு வருகை தந்தனர்.

    பாக்கியராஜ் தலைமையில் போட்டியிட்ட ஐசரி கணேசன், பிரசாந்த் உள்ளிட்ட சங்கரதாஸ் அணியினர் ஒட்டுமொத்தமாக வருகை தந்திருந்த நிலையில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணியில் இருந்து விஷால் மற்றும் கார்த்தி ஆகிய நடிகர்கள் வராமல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

    விஜய்யின் பீஸ்ட் பாடலை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. என்ன செய்தார் தெரியுமா?

    தபால் வாக்குகளை எண்ணுவதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஒட்டு மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக குற்றம்சாட்டி அதோடு இனி வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட போவதில்லை என அறிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற குளறுபடி குறித்து பேசிய ஐசரி கணேஷ், 1602 வாக்குகள் பதிவான நிலையில் எப்படி ஒவ்வொரு பதவிக்கும் 5 முதல் 19 வரை அதிகம் வந்தது என கேள்வி எழுப்பினர். மேலும் தபால் வாக்குகளில் 150 வாக்குகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசரி கணேஷ் குற்றம் சாட்டினர்.

    நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வரும் நிலையில் வாக்குகள் எண்ணிக்கைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறி பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்த நிலையில் இன்று மாலைக்குள் ஒட்டுமொத்த முடிவுகளும் வெளிவரும் என தெரிகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Karthi, Actor vishal, Nadigar Sangam

    அடுத்த செய்தி