நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய மூத்த நடிகர் கிருஷ்ணா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
நடிகர் திரு. கிருஷ்ணா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் இயக்கி வந்தவர். அவர் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பத்ம பூஷன், தென்னிந்திய பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருத உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.
மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் உடலுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் நேரில் அஞ்சலி…
மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் அவரது மகன் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
79 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டார். அத்துடன் தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வயது மூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தவர் நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணாவின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் சோமேஷ் குமாருக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிறப்பித்துள்ளார். இதையொட்டி, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.