ராதாரவியின் செயலைக் கண்டித்து நடிகர் சங்கம் அதிரடி கடிதம்!

நடிகர் ராதாரவியின் பேச்சை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது - நாசர்

news18
Updated: March 25, 2019, 1:37 PM IST
ராதாரவியின் செயலைக் கண்டித்து நடிகர் சங்கம் அதிரடி கடிதம்!
நடிகர் ராதாரவி
news18
Updated: March 25, 2019, 1:37 PM IST
நடிகர் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மூத்த நடிகர் ராதாரவி, “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகள், நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இயக்குநர் விகேஷ் சிவன் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை ட்விட்டரில் வலியுறுத்தினார். இதற்காக அவரை திமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன்.

இந்தநிலையில் இதுகுறித்து நடிகர் ராதாரவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் நடந்த கொலையுதிர் காலம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி வருகிறது.

இதுஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமான சூழ்நிலையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை.

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
Loading...
ஆனால், இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுகள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது, மட்டுமல்லாமல் திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை. எது எப்படி இருப்பினும் இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதைத் தவிர்த்தும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அந்தக் கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.



நயன்தாராவை பற்றி தவறாக பேசவில்லை - ராதாரவி விளக்கம் - வீடியோ

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...