Nadhiya: 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நதியா!

Nadhiya: 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நதியா!

நதியா

மலையாளத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

  • Share this:
    ஏறக்குறைய மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, லிங்குசாமி தமிழ் தெலுங்கில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.

    பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதிநேனி ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தின் பூஜை கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹீரோயினாக நடிப்பவரைப் பற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், உப்பென்னா ஹீரோயின் கிருதி ஷெட்டி லிங்குசாமியின் படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களைக் கவர்ந்த நதியா, திருமணத்திற்குப் பிறகு அம்மா, அண்ணி போன்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் நடிக்கவில்லை. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதோடு மலையாளத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

    தவிர, லிங்குசாமி இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திலும் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: