இந்திய சினிமாவில் தரம்வாய்ந்த படைப்புகளை இயக்குனர் ராஜமவுலி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகி மிக பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து 2022 ஆண்டிற்கான மெகா ஹிட் படமாக அமைந்தது.
தெலுங்கில் உருவான இப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான இப்படம் முதல் நாளிலே உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்தது. இந்திய சினிமாவில் வேறு எந்த படமும் இந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also read... பொது இடத்தில் ஆபாச வீடியோ.. உடையில் எல்லை மீறிய நடிகை உர்பி ஜாவேத் .. கைது செய்த போலீஸ்!
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு கூத்து' பாடல் 'பெஸ்ட் ஒரிஜினல் சாங்' என்ற கேட்டகிரியில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானது போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆடும் நடனம் மிகவும் வைரலானது. ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு அவர்களைப் போலவே நடனமாடி சமூக வலைதளங்களில் தங்கள் வீடியோவை பதிவிட்டது குறிப்பிடதக்கது.
நன்றி: Lahari Music | T-Series.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Junior NTR, Movie Video Songs, Rajamouli, Ram Charan