முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கனவு நனவானது... பாடகி ரிஹானாவை புகழ்ந்த ’நாட்டு நாட்டு’ பாடகர்!

கனவு நனவானது... பாடகி ரிஹானாவை புகழ்ந்த ’நாட்டு நாட்டு’ பாடகர்!

ரிஹானாவுடன் ராகுல் சிப்லிகுஞ்ச்

ரிஹானாவுடன் ராகுல் சிப்லிகுஞ்ச்

தெலுங்கு பின்னணி பாடகரான ராகுல், ரிஹானாவின் கனிவான குணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்கர் மேடையில் ஒலித்த நாட்டு நாட்டு பாடல் பெர்ஃபார்மென்ஸை பாராட்டி பாடகர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் பிரபல பாடகி ரிஹானா.

'பிளாக் பாந்தர்: வகண்டா ஃபாரெவர்' படத்தில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லிஃப்ட் மீ அப்' பாடலை மேடையில் பாடிய பாடகி ரிஹானாவைச் சந்தித்துள்ளனர், ’நாட்டு நாட்டு’ பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச், கால பைரவா மற்றும் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் மூவரும். ரிஹானாவை சந்தித்த அவர்கள் சொல்ல முடியாத அளவுக்குப் பரவசமடைந்தனர்.

உற்சாகமான சிப்லிகஞ்ச் ரிஹானாவுடனான படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அதை "கனவு நனவான தருணம்" என்றும் குறிப்பிட்டிருந்தார். தெலுங்கு பின்னணி பாடகரான ராகுல், ரிஹானாவின் கனிவான குணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாவ்! மிக அழகான இதயம் கொண்ட ஒரு அற்புதமான பெண்ணை சந்தித்தேன். உங்கள் கனிவைப் பார்த்து இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். நீங்கள் ரொம்பவும் டவுன் டு எர்த்தாக இருக்கிறீர்கள்! எங்களை அழைத்து, பெர்ஃபார்மென்ஸையும், ஆஸ்கர் விருதைப் பெற்றதற்காகவும் பாராட்டியதற்கு மிக்க நன்றி. இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம்! கனவு நனவானது” என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் சிப்லிகுஞ்ச்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன்

பெறுங்கள்.

First published:

Tags: Oscar Awards, Rihanna