முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆஸ்கர் மேடையில் ஒலிக்கும் RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்.. ராம் சரண் டான்ஸ் உண்டா?

ஆஸ்கர் மேடையில் ஒலிக்கும் RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்.. ராம் சரண் டான்ஸ் உண்டா?

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே சில முக்கிய விருதுகளை வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த மாதம் நடைபெறவிருக்கும் அகாடமி விருது மேடையில் RRR பட பாடலான ’நாட்டு நாட்டு’ பாடலை பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா பாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 12-ம் தேதி (இந்தியாவில் மார்ச் 13) நடைபெற உள்ள 95-வது அகாடமி விருது வழங்கும் விழாவில் RRR பட பாடலான நாட்டு நாட்டு இசைக்கப்படுகிறது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தப் பாடலை பாடகர்களான ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் ஆஸ்கார் விருது அறிமுக மேடையில் பாடுவதை அகாடமி விருது குழு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ராம் சரண் அல்லது ஜூனியர் என்டிஆர் அவர்களுடன் மேடையில் இணைந்து நடனம் ஆடுவார்களா என்பது குறித்துத் தெரியவில்லை.

கீரவாணியின் இசையில், சந்திரபோஸின் பாடல் வரிகளில், எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடலை இன்னும் அழகாக்கும் விதத்தில், நடிகர்கள் ராம் சரண் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் நடனம் கைதட்டல்களைப் பெற்றது. இதற்கிடையே பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் ஆஸ்கர் மேடையில் இப்பாடலை பாடுவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டருக்கு செல்லவிருக்கிறார்கள்.

நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே சில முக்கிய விருதுகளை வென்றுள்ளது. கடந்த ஜனவரியில் இப்பாடல் சிறந்த அசல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப்ஸ் விருது வென்றது. கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளின் 28-வது பதிப்பில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துடன், சிறந்த பாடலுக்கான விருதையும் பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Oscar Awards, Rajamouli, Ram Charan