ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

செல்வராகவன் படத்தில் தனுஷின் அட்டகாசமான இரு தோற்றங்கள்...!

செல்வராகவன் படத்தில் தனுஷின் அட்டகாசமான இரு தோற்றங்கள்...!

நானே வருவேன்

நானே வருவேன்

Naane Varuven: செல்வராகவனின் இந்த திரைப்படத்தில் தனுசுடன் யோகிபாபு இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். தனுஷின் இரண்டு தோற்றங்களில் ஒன்றில் கண்ணாடி அணிந்து தாடியுடன் இருக்கிறார். இன்னொன்றில் டீன் ஏஜ் பையன் போல கலரிங் தலைமுடியுடன் காட்சியளிக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் அவருக்கு இரண்டு வேடங்கள் என்று சில தினங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். அதனை படத்தின் புதிய போஸ்டரும் உறுதி செய்துள்ளது.

செல்வராகவன் - தனுஷ் -யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணையும் போதெல்லாம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படமும், சிறந்த சில பாடல்களும் கிடைக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் இந்தக் கூட்டணி இணைந்து இருக்கிறது. தாணு படத்தை தயாரிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. ஆனாலும் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்கப்படாமல் இருந்தது.

மாறன் திரைப்படத்துக்குப் பிறகு திருச்சிற்றம்பலம் படத்தை முடித்த தனுஷ் வாத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தற்போது அவர் நானே வருவேன் திரைப்படத்திற்கு திரும்பியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் இருவேடங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு வேடங்களையும் கொண்ட புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Also read... எட்டு வருட காத்திருப்புக்கு பின் இணையும் விக்ரம், இரஞ்சித்...!

செல்வராகவனின் இந்த திரைப்படத்தில் தனுசுடன் யோகிபாபு இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். தனுஷின் இரண்டு தோற்றங்களில் ஒன்றில் கண்ணாடி அணிந்து தாடியுடன் இருக்கிறார். இன்னொன்றில் டீன் ஏஜ் பையன் போல கலரிங் தலைமுடியுடன் காட்சியளிக்கிறார். செல்வராகவனின் கடந்த சில திரைப்படங்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. நானே வருவேன் அவரது கம்பேக் திரைப்படமாக இருக்கும் என அவரது ஹார்ட்கோர் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush, Director selvaragavan