ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்யவில்லை - கலைப்புலி எஸ்.தாணு

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்யவில்லை - கலைப்புலி எஸ்.தாணு

தனுஷுடன் தாணு

தனுஷுடன் தாணு

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் ’நானே வருவேன்’ ரிலீஸில் மோதுவது குறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவின.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக நானே வருவேன் படத்தை ரிலீஸ் செய்யவில்லை என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். 

  நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம் இன்று செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில், சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம், யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

  மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் ’நானே வருவேன்’ ரிலீஸில் மோதுவது குறித்து சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவின. இதையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தாணு, தான் எந்த படத்துடனும் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். ‘குணா’, ‘தளபதி’, ‘வண்ண வண்ணப் பூக்கள்’ ஆகிய படங்களை உதாரணம் காட்டிய அவர், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வேலை செய்தாரோ அதே பாணியை தான் தற்போதும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மகாலட்சுமியின் கனவு நனவானது... விசேஷத்தைப் பகிர்ந்த ரவீந்தர்!

  மேலும், தமிழகத்துக்கும், தமிழ் திரையுலகுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வெளியாகும் இரண்டு படங்களை ஏன் எல்லோரும் போட்டியாகப் பார்க்கிறார்கள் என்றும் அந்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு நவராத்திரி விடுமுறையை குறிவைத்து செப்டம்பர் 29-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தனுஷின் ‘அசுரன்’ படமும் நவராத்திரி விடுமுறையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற செண்டிமெண்டால் நானே வருவேன் படத்தையும் நவராத்திரி விடுமுறை சமயத்தில் வெளியிடுவதாக முடிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார் தாணு.

  Published by:Shalini C
  First published:

  Tags: Dhanush, Tamil Cinema