• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • செல்வராகவனின் நானே வருவேன் - கௌபாய் லுக்கில் அசத்தும் தனுஷ்!

செல்வராகவனின் நானே வருவேன் - கௌபாய் லுக்கில் அசத்தும் தனுஷ்!

தனுஷ்

தனுஷ்

Naane Varuven: நானே வருவேன் படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
செல்வராகவனின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதில் தனுஷின் கெட்டப் புதுவிதமாக ரசிகர்களின் கவரும்விதத்தில் உள்ளது.

தனுஷ் படங்களின் வரிசை யாராலும் கணிக்க முடியாதபடி உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது ஹாலிவுட் படமான தி க்ரே மேனின் படப்பிடிப்பை தனுஷ் முடித்தார். அதன் பிறகு அவர் எந்தப் படத்தில், யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், யுஎஸ்ஸிலிருந்து திரும்பிய மறுநாளே, ஹைதராபாத்தில் நடந்த மாறன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கார்த்திக் நரேன் இயக்கும் படம் இது

மாறன் படப்பிடிப்பின் போது இயக்குனர் சேகர் கம்முலா தனுஷை சந்தித்தார். சேகர் கம்முலா தனுஷை வைத்து பான் - இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்குவதால், தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அதற்கு மாறாக, மாறன் படத்தில் நடிக்கும் போதே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடங்கினார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Also read... தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத்துக்கு ஹேப்பி பர்த்டே!

இந்நிலையில், சேகர் கம்முலாவின் லவ் ஸ்டோரி தெலுங்குப் படம் இரு வாரங்கள் முன் வெளியானது. அப்போது பேசிய அவர், அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். அதனால், தனுஷ் அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக இன்று செல்வராகவனின் நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.



நானே வருவேன் படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட்டை இன்று வெளியிடுவதாக செல்வராகவன் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.



இதில் தனுஷ் கௌபாய் தொப்பியும், வாயில் சுருட்டுமாக வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் செல்வராகவன் - தனுஷ் - யுவன் கூட்டணி அமைவதால் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: