ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Naane Varuvean: புரொமோஷன் செய்யாமல் இருந்தது தான் நானே வருவேன் படத்திற்கான புரொமோஷன்!

Naane Varuvean: புரொமோஷன் செய்யாமல் இருந்தது தான் நானே வருவேன் படத்திற்கான புரொமோஷன்!

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

நானே வருவேன் படத்தின் போஸ்டர்

படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

  செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தை கலைபுலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இதில் நடிகர் தனுஷ், அண்ணன் - தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணன் நல்லவராகவும், தம்பி பழிவாங்குபவராகவும் நடித்துள்ளது டீசரிலேயே அறிந்துக் கொள்ள முடிந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  படத்தில் இயக்குநர் செல்வராகவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வராகவன் - தனுஷ் - யுவன் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழும். அந்த எதிர்பார்ப்பு இந்த படத்திலும் குறையவில்லை. இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

  கவலையை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா - வெளிநாட்டில் மகிழ்ச்சி நடனம்!

  நானே வருவேன் இடைவேளை - மொத்தமும் ஆச்சரியம், படத்தின் கண்டெண்ட் மிகவும் புதியது. தனுஷ் மற்றும் செல்வராகவன் ஒரு புதிய விஷயத்தை முயற்சித்துள்ளனர், அது பார்வையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதால் அதனை வெளிப்படுத்தப் போவதில்லை. முற்றிலும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

  நானே வருவேன் படத்தின் மிகப்பெரிய ப்ரோமோஷன் படக்குழு கடைப்பிடித்த மௌனம்!

  இடைவேளை - என்ன ஆச்சரியம்! இதுவரை நாம் நினைத்ததை ஒரு புத்தம் புதிய கோணத்தில் கொண்டு வந்திருக்கும் த்ரில்லர் படம்.

  நானே வருவேனின் சிறந்த விஷயம் என்னவென்றால், படக்குழு படத்தை விளம்பரப்படுத்தவில்லை, அது ஒரு சிறந்த ட்ரிக்.

  முதல்பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார்.

  விடுமுறையைக் கொண்டாட ஏற்ற படம்.

  முதல் பாதியும் இரண்டாம் பாதியும்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Selvaraghavan