ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘நான் மிருகமாய் மாற படம் இல்லாவிட்டால் கிராமத்தில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்திருப்பேன்’ – சசி குமார் கிண்டல் பேச்சு…

‘நான் மிருகமாய் மாற படம் இல்லாவிட்டால் கிராமத்தில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்திருப்பேன்’ – சசி குமார் கிண்டல் பேச்சு…

நான் மிருகமாய் மாற படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

நான் மிருகமாய் மாற படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

நான் மிருகமாய் மாற படத்தைத் தொடர்ந்து மீண்டும் சசிகுமார் - சத்ய சிவா ஆகியோர் புதிய திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்ற உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நான் மிருகமாய் மாற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியபுரம், நாடோடிகள் படங்களில் நடித்த சசிகுமார் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார்.  கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சசிகுமார், சத்ய சிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகர் சசிகுமார்,  நான் மிருகமாய் மாற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இது இல்லை என்றால் கிராமத்தில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்து கொண்டு இருப்பது போன்ற படங்களின் நடித்துக் கொண்டிருப்பேன். இது நல்ல வாய்ப்பாக அமைந்தது என தெரிவித்தார். மேலும் தான் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற மற்றும் காரி படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகின்றன. இந்த படங்களை பேசி முடிவெடுத்து குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு தயாரிப்பாளர்களிடம் தெரிவித்திருந்தேன்.  ஆனால் இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என கூறினார்.

‘இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்தை பாதுகாப்பது நம் கடமை’ – கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து ஜி.வி. பிரகாஷ் உருக்கமான பதிவு…

இவரைப் போல இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுவையில் இந்த திரைப்படத்தில் பாடல்கள் கிடையாது,  பின்னணி இசை மட்டுமே.  ஒலிப்பதிவாளரின் (Sound) வாழ்க்கை படம் என்பதால் அது சார்ந்த சத்தத்துடன் இசையமைக்க இயக்குனர் வேண்டுகோள் வைத்தார். அது சவாலாக இருந்தது.  மேலும் சிறந்த இசையை கொடுத்திருப்பதாக கூறினார்.

மாடர்ன் ட்ரெஸில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்..

மேலும் இயக்குனர் சத்ய சிவா பேசுகையில் இந்த திரைப்படம் குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டதாகவும் அதற்காக கடினமாக உழைத்ததாகவும் கூறினார். மேலும் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என கூறினார். நான் மிருகமாய் மாற படத்தைத் தொடர்ந்து மீண்டும் சசிகுமார் - சத்ய சிவா ஆகியோர் புதிய திரைப்படத்திற்காக இணைந்து பணியாற்ற உள்ளனர்.

Published by:Musthak
First published:

Tags: Kollywood