படத்தில் பஞ்ச் டயலாக் பேசினால் போதாது... சூர்யாவின் துணிச்சல் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும் - சீமான்

news18
Updated: July 21, 2019, 3:25 PM IST
படத்தில் பஞ்ச் டயலாக் பேசினால் போதாது... சூர்யாவின் துணிச்சல் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும் - சீமான்
சீமான் | சூர்யா
news18
Updated: July 21, 2019, 3:25 PM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பாராட்டுதலுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய சூர்யா, “20 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருப்பதால், நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன்.

மீண்டும், மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம், சமமான தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஏன் மாணவர்களோ, ஆசிரியர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது கேள்வியாக உள்ளது. இதுதான் நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வியை மாற்றப்போகிறது. நிச்சயமாக அதில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு. ஆனால் அச்சம் தரக்கூடிய நிறைய விஷயங்களும் உள்ளன.


அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும்” என்றார்.

சூர்யாவின் இந்த பேச்சு சர்ச்சையை உருவாக்கியது. பாஜகவினர் சூர்யாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூர்யாவுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முதல் நபராக சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இன்று இயக்குநர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமானிடம் பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

Loading...

அப்போது பேசிய சீமான், “நடிகர் சூர்யா பேசியது பாராட்டுதலுக்குரியது, அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும், பஞ்ச் டயலாக் படத்தில் பேசினால் போதாது, வெளியில் வந்து பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்.

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...