இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் சீமானா?

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிரச்னையை முடிக்கும் வரை வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போட்டது.

news18
Updated: July 29, 2019, 8:11 PM IST
இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் சீமானா?
வடிவேலு | சீமான்
news18
Updated: July 29, 2019, 8:11 PM IST
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க சீமானிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து சூப்பர்ஹிட் அடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை இயக்க சிம்புதேவன் முடிவு செய்தார்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் இந்தப்படத்தை தயாரிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டார். மேலும் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். படத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடைபெற, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.


வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்துக்காக செலவழித்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியது. இதை முதலில் மறுத்த வடிவேலு, பிறகு நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.

Loading...

இந்தப் படத்துக்கு செலவழித்த தொகையை திருப்பி கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியதற்கு வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிரச்னையை முடிக்கும் வரை வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போட்டது.

சமீபத்தில் 24-ம் புலிகேசி படம் குறித்து பேசிய வடிவேலு, “அந்த படத்தை சிம்புதேவன் இயக்குகிறாரா அல்லது சங்கர் இயக்குகிறாரா என தெரியவில்லை. சங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர். காமெடி படம் குறித்து அவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?  என்று கூறினார். மேலும், இப்படத்தில் வடிவேலுவின் உண்மையான நடிப்பை அவர்கள் எதிர்பர்க்கவில்லை என்றும் இவர்கள் என்னை நடிக்க விடவில்லை என்றாலும் எனக்கு என்ட் கார்டே கிடையாது என் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

சங்கர் - வடிவேலு இடையே நீடித்து வந்த இந்த பிரச்னையை தயாரிப்பாளர் ஒருவர் தலையிட்டு தீர்த்து வைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தெரிய வருகிறது.

இதனிடையே இந்தப் படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த ச்ந்தானம்

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...