இளைஞர்களின் அரசியல் ஆசானே... உன் வியர்வை வீண் போகாது - சீமானுக்கு பாரதிராஜா வாழ்த்து

சீமான் | பாரதிராஜா

திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

 • Share this:
  மறைந்த நடிகர் மணிவண்ணன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர்  ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீமான். அதைத்தொடர்ந்து ‘தம்பி’, வாழ்த்துகள்,  'வீரநடை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். திரைப்படங்களை இயக்குவது இல்லை என்றாலும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

  அரசியலில் இருந்தாலும் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்க சீமான் திட்டமிட்டிருப்பதாக தகவல்களும் வெளியாகின. ஆனால் அது இன்னும் நனவாகவில்லை. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் சீமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  மேலும் படிக்க: ‘ஈஸ்வரன்’ டப்பிங்கை முடித்த சிம்பு - வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்

  இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கும் வாழ்த்து செய்தியில், “நம் இனத்துக்கான உன் போராட்டங்களும் உன் வார்த்தைகளும் இங்கு உற்று கவனிக்கப்படுகிறது. உன் வியர்வை வீண் போகாது.
  உரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் அரசியல் ஆசானே. ஒரு நாள் வென்றேத் தீர்வோம்.பேரன்பு கொண்ட மகன் செந்தமிழ் சீமானே. வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: