ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கொஞ்சமாவது நன்றியோடு இருங்க - விஜய் சேதுபதியை மீண்டும் வம்புக்கிழுத்த இடும்பாவனம் கார்த்திக்

கொஞ்சமாவது நன்றியோடு இருங்க - விஜய் சேதுபதியை மீண்டும் வம்புக்கிழுத்த இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக் - விஜய் சேதுபதி

இடும்பாவனம் கார்த்திக் - விஜய் சேதுபதி

தி பேமிலி மேன் படத்தை இயக்கியவர்களின் அடுத்த வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் சேதுபதியை மீண்டும் வம்பிக்கிழுத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக்.

  இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க இருந்ததும், அதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதும், நாம் தமிழர் உள்பட பல கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பால், விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதும், விஜய் சேதுபதி இல்லையென்றால் படமே வேண்டாம் என முரளிதரன் அப்படத்தையே கைவிட்டதும் அனைவரும் அறிந்த செய்திகள்.

  அந்த சம்பவத்தின் போது நாம் தமிழர் கட்சியினர் விஜய் சேதுபதியை கடுமையான மொழியில் விமர்சித்தனர். தமிழர் துரோகி என்றனர். இந்நிலையில், தி பேமிலி மேன் படத்தை இயக்கியவர்களின் அடுத்த வெப் தொடரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக், விஜய் சேதுபதியை கண்டித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  naam tamilar katchi Idumbavanam Karthik once again fuss Vijay Sethupathi, vijay sethupathi, sethupathi movies, vijay sethupathi best performance, vijay sethupathi family man, விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி படங்கள், Vijay Sethupathi in the new web series of The Family Man Directors, The Family Man 2 Web Series, the family man 2, த ஃபேமிலி மேன், அமேசான் ப்ரைம், the family man 2 controversy, the family man 2 amazon prime, த ஃபேமிலி மேன் சர்ச்சை, the family man raj & dk, vijay sethupathi in Raj & DK web series, vijay sethupathi web series, விஜய் சேதுபதி, விஜய் சேதுபதி வெப் சிரீஸ், விஜய் சேதுபதி வலைத்தொடர், naam tamilar katchi, naam tamilar katchi idumbavanam karthik, idumbavanam karthik vijay sethupathi, இடும்பாவனம் கார்த்திக் விஜய் சேதுபதி, நாம் தமிழர் கட்சி
  ஃபேமிலி மேன் இயக்குநர்களுடன் விஜய் சேதுபதி

  "தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளைக் கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களைக் காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்படி முடிகிறது? வெட்கமின்றி மக்கள் செல்வன் என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி" என கூறியுள்ளார்.

  இதற்கு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் கடும் கண்டனங்களும், எதிர்வினையும் புரிந்து வருகிறார்கள். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள், ராஜீவ்காந்தியை கொலை செய்த பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், புலிகளை ஆதரித்து பேசியவர்களை தடா போன்ற பயங்கரவாத சட்டத்தில் சிறையில் அடைத்த ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு, ஈழத்தாய் என புகழ்ந்த நாம் தமிழர் கட்சிக்கு விஜய் சேதுபதியை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது என விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi