• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பிரபலம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பிரபலம்?

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த வருட பிக் பாஸில் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி-யின் பிரபல சீரியல் நடிகர் கலந்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் அறிமுகமானது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளன. இவையனைத்தையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் சீசன் துவங்கவிருக்கிறது.

    இதன் ப்ரோமோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருட பிக் பாஸில் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிளா (நடிகை ஷகிலாவின் மகள்), நமீதா மாரிமுத்து (நாடோடிகள் 2 பட புகழ்), மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ப்ரியா ராமன் uள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by Raju Jeyamohan (@raju_jeyamohan)






    இந்நிலையில் விஜய் டிவி-யின் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜு, தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார். அதோடு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் கவின் நடித்த ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: