Home /News /entertainment /

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கம்போஸிங்கிற்காக லண்டன் சென்ற வடிவேலு!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கம்போஸிங்கிற்காக லண்டன் சென்ற வடிவேலு!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டன் சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
வடிவேலு தனது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக அப்படத்தின் இயக்குனருடன் லண்டன் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று தயாரிப்பாளர் கே.ராஜன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஏற்படுத்தும் வெட்டிச் செலவுகள். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் புரொடக்ஷன் கம்பெனி தரும் உணவை பெரும்பாலும் உண்பதில்லை. ஸ்டார் ஹோட்டல்களிலிருந்தே இவர்களுக்கு உணவு தருவிக்கப்படும். அதேபோல் இசையமைப்பாளர்கள். கதை ஆண்டிப்பட்டியில் நடப்பதாக இருக்கும். அதற்கு பாடல் கம்போஸ் செய்ய அமெரிக்கா போனால்தான் ஆச்சு என்பார்கள். இந்த வெட்டிச் செலவுகளில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தையே எடுத்துவிடலாம்.

பல வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டன் சென்றுள்ளார். லண்டன் எதற்கு? அது அப்படித்தான். பெரிய புரடியூசர் என்றால் வெளிநாட்டில்தான் கம்போஸிங். இந்த எக்ஸ்ட்ரா செலவுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா செலவு வைப்பது போல் படத்தின் இயக்குனர் சுராஜும் லண்டன் சென்றிருக்கிறார். இதாவது பரவாயில்லை என்பது போல் நடிக்கிற வடிவேலும் சென்றிருப்பதுதான் ஆச்சரியம். இவையெல்லாம் தயாரிப்பாளர் செலவு. பட்ஜெட்டில் இதுவும் ஏறும். இந்த பணத்தையும் ரசிகர்கள் கொடுக்கும் டிக்கெட் கட்டணத்தில்தான் சரி செய்ய வேண்டும்.

Also read... பாலா, சூர்யா இணையும் படத்தில் பிரபல எழுத்தாளர்...!

தேறாத கதைகளை படமாக்கி யுடிவி போன்ற பல  கம்பெனிகளை தமிழகத்தைவிட்டே துரத்தியடித்தார்கள். லைகாவுக்கும் அதுபோல் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே திரைத்துறையினரின் பேச்சாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vadivelu

அடுத்த செய்தி