Home /News /entertainment /

பொங்கலுக்கு வெளியாகும் கார்த்தியின் நா பேரு சிவா 2...!

பொங்கலுக்கு வெளியாகும் கார்த்தியின் நா பேரு சிவா 2...!

நா பேரு சிவா 2

நா பேரு சிவா 2

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக வேண்டிய ஆர்ஆர்ஆர், ஜனவரி 14 வெளியாக வேண்டிய ராதே ஷ்யாம் இரண்டும் தள்ளிப்போனதால் சுமார் 15 சின்ன பட்ஜெட் தெலுங்குப் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன.

  • News18
  • Last Updated :
கார்த்தியின் தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு நல்ல சேதி. இந்த பொங்கலுக்கு கார்த்தியின் படம் ஒன்று தெலுங்கில் வெளியாகிறது.

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக வேண்டிய ஆர்ஆர்ஆர், ஜனவரி 14 வெளியாக வேண்டிய ராதே ஷ்யாம் இரண்டும் தள்ளிப்போனதால் சுமார் 15 சின்ன பட்ஜெட் தெலுங்குப் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. இந்த பதினைந்தில் கார்த்தி நடித்த படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இந்த அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டது.

கார்த்தி நடிப்பில் 2014 இல் வெளியான படம் மெட்ராஸ். இரஞ்சித் இயக்கியிருந்த இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பாராட்டப்பட்டது. கேத்தரின் தெரேசா இதில் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை நா பேரு சிவா 2 என்ற பெயரில் ஜனவரி 13 தெலுங்கில் வெளியிடுகின்றனர்.

Also read... சமந்தாவுக்கு போட்டியாக நடனத்தில் பட்டையை கிளப்பும் ரெஜினா...!

2010 இல் வெளியான கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தை தெலுங்கில் நா பேரு சிவா என்ற பெயரில் வெளியிட்டனர். இந்தப் படம் அங்கு ஹிட்டானது. அதனால் நா பேரு சிவா 2 என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகம் போல் மெட்ராஸ் வெளியாகிறது.

Also read... புத்தாண்டை ஒன்றாக கொண்டாடிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி

கார்த்தியின் கைதி படத்துக்குப் பிறகு அவருக்கு தெலுங்கு ரசிகர்களும், தெலுங்கு மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. நா பேரு சிவா 2 அதனை அறுவடை செய்யும் என்று நம்பி சங்கராந்திக்கு படத்தை வெளியிடுகிறார் ஞானவேல்ராஜா. படம் வெளியாகி 7 வருடங்களுக்குப் பிறகும் லாபத்துக்கான வாசல்கள் திறப்பது ஆச்சரியம்தான்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி