Home /News /entertainment /

பறவையே எங்கு இருக்கிறாய்? தமிழக அரசின் 3 விருதுகளைப் பெறும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!

பறவையே எங்கு இருக்கிறாய்? தமிழக அரசின் 3 விருதுகளைப் பெறும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்!

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார்

2012-ம் ஆண்டில் பல படங்களுக்கும், 2013-ல் தங்கமீன்கள் படத்துக்கும், 2014-ல் சைவம் திரைப்படம் என அடுத்தடுத்து மூன்று விருதுகள் நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படவிருக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 2012, 2013 மற்றும் 2014 என தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு சிறந்த பாடலுக்கான தமிழக அரசின் விருதைப் பெறுகிறார். 


    கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு தற்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுபவர்களின் விபரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு சூழல்களால் விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது 2009 - 2014 ஆம் ஆண்டில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் 4-ம் தேதி மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஒரு வருடத்திற்கு முன்பே பெரியார் படிப்பகத்தில் பென்சியாவை மணந்த குக் வித் கோமாளி புகழ்!

    இதில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் சிறந்த பாடலாசிரியருக்கான விருது மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டில் பல படங்களுக்கும், 2013-ல் தங்கமீன்கள் படத்துக்கும், 2014-ல் சைவம் திரைப்படம் என அடுத்தடுத்து மூன்று விருதுகள் அவருக்கு வழங்கப்படவிருக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்னும் பல ஆண்டுகள் இருந்து மனதிற்கினிய பல பாடல்களை கொடுத்திருக்க வேண்டியவரை வெகுவிரைவில் காலன் அழைத்துக் கொண்டது பெருங்கொடுமை.
    Published by:Shalini C
    First published:

    Tags: Na Muthukumar

    அடுத்த செய்தி