முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தனது மனைவியையே 2வது திருமணம் செய்த நடிகர் - இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா? அதிர்ச்சி தகவல்

தனது மனைவியையே 2வது திருமணம் செய்த நடிகர் - இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா? அதிர்ச்சி தகவல்

மனைவி, மகள்களுடன் சி.சக்கூர்

மனைவி, மகள்களுடன் சி.சக்கூர்

அதாவது முஸ்லீம் சட்டப்படி ஆண் வாரிசு இல்லையென்றால் சொத்தில் ஒரு பகுதி அவரது சகோதரர்களுக்கு சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'நா தான் கேஸ் கொடு' படத்தில் வழக்கறிஞராக நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சி.சுக்கூர். இவர் உண்மையில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவர் தனது முன்னாள் மனைவி ஷீலாவை மீண்டும் 2வது முறையாக திருமணம் செய்துகொண்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். முதல் திருமணம் நடைபெற்று 29 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக திருமணம் நடைபெற்றுவருகிறது.

முஸ்லீம் தம்பதிகளான இருவரும் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது மனைவி ஷீலாவை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் 3 மகள்களும் சாட்சியாக கலந்துகொண்டனர்.

இவர்களது திருமணம் முஸ்லிம் தனி நபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லீம் அமைப்புகள் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மரணத்திற்கு பிறகு தனது சொத்துகள் சகோதரர்களுக்கு போய் விடக்கூடாது என அவர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Marriage