மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 4 மொழிகளில் வெளியாகவுள்ளது.
கடந்த 2014-ல் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 29-ம்தேதி மாலை 5 மணிக்கு பிசாசு 2 படத்தின் டீசர் வெளியாகும் என்று இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Pisasu2 | #Pisachi2 | #Pishaachi2 | #Pishaachi2@Rockfortent @andrea_jeremiah @shamna_kkasim @Actorsanthosh @Lv_Sri @kbsriram16 @APVMaran @saregamasouth @teamaimpr @UrsVamsiShekar @PRO_Priya pic.twitter.com/iKZ4iDhUDr
— Mysskin (@DirectorMysskin) April 25, 2022
பிசாசு 2 படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் பிசாசு 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகிய பாடகியான ஆண்ட்ரியா தமிழில் பச்சைக் கிளி முத்துச் சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து போல்டான கேரக்டர்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு அதிக பாராட்டுக்களை பெற்றது. மேக்கிங் மற்றும் திரைக்கதையில் மிஷ்கின் கலக்குவார் என்பதால் பிசாசு 2 திரைப்படமும் பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - Beast Movie : பீஸ்ட் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி வைத்த விஜய்…
இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த மிஷ்கின், 3 ஆண்களுக்கு நிகராக ஆண்ட்ரியா நடித்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mysskin