Pisasu 2: பிசாசு 2 படத்துக்கு தேதி குறித்த மிஷ்கின்!

பிசாசு 2

துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் படத்திலிருந்து வெளியேறிய மிஷ்கின் பிசாசு 2 படத்தை தொடங்கினார்.

  • Share this:
    பிசாசு 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஷ்கின். படப்பிடிப்பை என்று முடிப்பது என தேதி குறித்துள்ளார் என்கிறது பிசாசு 2 படக்குழு.

    பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய படம் பிசாசு. வழக்கமாக திரைப்படங்களில் வரும் பேய்கள் பழிவாங்கும். மாறாக பிசாசு படத்தில் தனது இறப்புக்கு காரணமானவனுக்கு கருணை காட்டும் பேயை காட்டியிருந்தார் மிஷ்கின். படத்தில் ராதாரவியின் சென்டிமெண்ட் நடிப்பு பேசப்பட்டது.

    துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் படத்திலிருந்து வெளியேறிய மிஷ்கின் பிசாசு 2 படத்தை தொடங்கினார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தார். ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரியாவுக்கு அவரது நடிப்புருக்காக தேசிய விது கிடைக்கும் என மிஷ்கின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிசாசு 2-க்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். அவர் மிஷ்கின் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்திவரும் மிஷ்கின், வரும் 18-ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்ய முடிவு செய்துள்ளார். அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை விரைவாக முடித்து ஓடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

    பிசாசு 2 நிச்சயம் திரையரங்கில் வெளியாகாது, ஓடிடி வெளியீடுதான் என்று அடித்துச் சொல்கிறது படக்குழு. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: